התחל במצב לא מקוון עם האפליקציה Player FM !
எலி பொம்மை - 40வது கதை
Manage episode 291724517 series 2890601
எலி பொம்மை
ஊர் தலைவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மக்கள் எல்லோரும் விருந்துக்கு வந்திருந்தாங்க. அப்போ வீட்டுத் திண்னையில் எலி ஒண்ணு போறத பார்த்தாரு தலைவர். உடனே அவருக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோணுச்சு. அங்க இருந்த மக்கள்கிட்ட யார் தத்ரூபமா ஒரு எலி பொம்மைய செய்றாங்களோ அவங்களுக்கு 1000 ரூபாய் சன்மானம்ன்னு அறிவிச்சாரு. வேடிக்கையான யோசனையா இருந்ததால மக்கள் எல்லோரும் ஆர்வமாகிட்டாங்க. அதுல ஒருத்தர் தலைவர்கிட்ட எலி பொம்மையை நல்லா செஞ்சாங்கன்னு யார் தீர்ப்பு சொல்லுவா ? ன்னு கேட்டாரு. அதுக்கு தலைவர் எங்க வீட்டுல பூனை இருக்கு. அந்த பூனை எந்த எலி பொம்மைய எடுக்குதோ அந்த பொம்மைய செஞ்சவருக்குத்தான் பரிசு அப்படின்னு அறிவிச்சாரு. பூனைய விட எலிய யாருக்கு நல்லா தெரியும்ன்னு மக்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லோரும் ஆவலா பங்கெடுத்துக்கிட்டாங்க. ஒருத்தர் எலிய குண்டா பண்ணினார். இன்னொருத்தர் எலியின் வால் அளவ பெருசா பண்ணினார். மற்றொருத்தர் எலியோட வண்ணம் மற்றும் உடலமைப்பை அப்படியே செஞ்சார். தலைவர் சொன்ன நாள்ல அவரவர் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சாங்க. அதுல ராஜீவ் என்கிற சிறுவனும் தான் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சான். அவனது பொம்மை பார்க்கிறதுக்கு எலி மாதிரியே தெரியல. மக்களும் இது எலிதானா? போட்டி என்னனு தெரியுமா ? அப்படின்னு அவனை கிண்டல் பண்ணினாங்க. அவன் அமைதியா இருந்தான். தலைவர் தன் வீட்டு பூனைய எலி பொம்மைங்க கிட்ட விடுறதுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்த பொம்மைகள பார்த்தாரு. அவரும் ராஜீவ் கிட்ட வந்து தம்பி உன்னுடைய பொம்மை எலி மாதிரியே தெரியலயே. வெற்றி பெறும் வாய்ப்பும் உனக்கு இல்ல. போட்டியில கலந்துக்காத அப்படின்னு சொன்னாரு. அவன் ஒத்துக்கல. பூனையை எலி பொம்மைங்க முன்னாடி கொண்டு வர சொன்னாரு தலைவர் . பூனை வந்தது. தரையில வரிசைப்படுத்தி வச்சிருந்த எலி பொம்மைகளை பார்த்தது. தன பொம்மையை தான் எடுக்கும்ன்னு நினைச்சிட்டு இருந்தவங்க பொம்மையை பூனை எடுக்கல. ராஜீவ் செஞ்சிருந்த எலி பொம்மைய கவ்விக்கிட்டு ஓடிருச்சு. எல்லோருக்கும் ஏமாற்றம். மக்கள் யாரும் பூனையின் தீர்ப்பை ஒதுக்கல. தலைவர் மக்கள்கிட்ட நானும் அவன் பொம்மை எலி மாதிரியே இல்லை அப்ப்டிங்கிறத ஒத்துகிறேன்.ஆனா பூனை அவன் செஞ்ச எலியத் தான் எடுத்தது. மனுசன விட எலிகளை பத்தி பூனைகளுக்குத் தான் நல்லா தெரியும்ன்னு சொல்லி பரிசு பணத்த ராஜீவ் கிட்ட கொடுத்தார் தலைவர். அவன தனியா அழைச்சிட்டு போய் உன் பொம்மைய ஏன் எடுத்தது பூனை அப்படின்னு கேட்டாரு தலைவர். அதற்கு ராஜீவ் ஐயா நடுவராக பூனைக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி நான் என் களிமண் எலி பொம்மைய கருவாடோட சேர்ந்து செஞ்சேன், அதனாலத்தான் ஜெய்ச்சேன்னு சொன்னான். ஊர் தலைவர் அசந்து போய்டடாரு.
---
கதை மூலம்: Tinkle
45 פרקים

כל הפרקים
×ברוכים הבאים אל Player FM!
Player FM סורק את האינטרנט עבור פודקאסטים באיכות גבוהה בשבילכם כדי שתהנו מהם כרגע. זה יישום הפודקאסט הטוב ביותר והוא עובד על אנדרואיד, iPhone ואינטרנט. הירשמו לסנכרון מנויים במכשירים שונים.